ஒன்-டேப் ரீசார்ஜ் மற்றும் இன்னும் பல, செயலி கேஷ்பேக் சலுகைகளை பெறுவதற்கு டிஷ்டிவி செயலியை பதிவிறக்கவும்!
Recharge, Manage your Account & Explore Exciting Offers!
close
DTH India, Digital TV, DTH Services| Dish TV
Instant Recharge
Manage your account
Access Control Guide
Quick Fix
Transaction History
Exclusive Offers

உங்கள் டிஷ்டிவி மொபைல் செயலி மூலம் என்னவெல்லாம் செய்ய முடியும்?

உடனடி ரீசார்ஜ்
வெறும் ஒரே டேப்பில் எப்போதும், எங்கும் ரீசார்ஜ் செய்யுங்கள் மேலும் பரந்தளவிலான பணம்செலுத்தும் முறைகள்.
உங்கள் கணக்கை நிர்வகிக்கவும்
உங்கள் பேக்கை மாற்றுங்கள் அல்லது ஒருசில டேப்களில் சேனல்கள்/சேவைகளை சேர்த்திடுங்கள்.
சேனல் கைடு
உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என தெரிந்துகொள்ளுங்கள் மற்றும் அதற்கான நினைவூட்டலை அமைத்திடுங்கள்.சேனல்களை ஃபேவரைட்ஸாக அமைத்திடுங்கள்.
விரைவான திருத்தங்கள்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ADI எனப்படும் சாட்போட்டுடன் My DishTv ஆப்-யிடம் பேசுங்கள்.ADI -யிடம் உங்கள் டிஷ்டிவி தொடர்பான பிரச்சனைகளை கூறி அதற்கான தீர்வுகளை விரைவாக பெறுங்கள்.
பரிவர்த்தனை வரலாறு
உங்கள் கடந்த ரீசார்ஜ்கள் அல்லது விலைப்பட்டியல்களை பதிவிறக்கி காணுங்கள்
இன்ஃப்ராரெட் ரிமோட்
உங்கள் டிஷ்டிவி செட்-டாப் பாக்சின் புதிய நண்பன்: இப்போது உங்கள் டிஷ்டிவி செட்-டாப்-பாக்சை புதிய இன்ஃப்ராரெட் ரிமோட் அம்சத்துடன் பயன்படுத்துங்கள்.

*இன்ஃப்ராரெட் டிரான்ஸ்மிட்டர்கள் கொண்ட சாதனங்களுக்கு மட்டும். உங்கள் சாதனத்தின் தயாரிப்பாளருடன் சரிபார்க்கவும்.

- ப்ரேம் ராவல்
மேம்படுத்தப்பட்ட புதிய ஆப்…
- பிரதீப் குமார்
மிகவும் சிறப்பான மற்றும் எளிதான ஆப்.
- தீபாங்கர் பட்டாச்சார்யா
இந்த ஆப் புதுமையானதாக மேம்பட்டுள்ளது, ரிமோட் அம்சம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. வாழ்த்துக்கள்…
- பிரசாத் எழுச்சுரி
அனைத்து டிஷ்டிவி தகவல்களும் கையில். ரீசார்ஜ் செய்ய எளிதானது
- பாரி வலியா
மிகவும் அருமையான செயலி, உங்கள் பேக்கை மாற்றியமைக்க, டிஷ்ஷை புதுப்பிக்க, உடனடியாக ரீசார்ஜ் செய்ய இது போன்ற வேலைகளை செய்ய.. நீங்கள் வாடிக்கையாளர் மையத்தை அழைக்கத் தேவையில்லை., மிகச்சிறந்த செயலி
- மண்டி சந்து
இந்த செயலி மிகவும் பிரபலமானது, பயனுள்ளது மற்றும் தகவலை தருகிறது. புதிய கூடுதலான சேனல் கையேடு சிறப்பாக உள்ளது.
- ஷாம்ஷேர் தாக்கூர்
ஒரு பயனர் பயன்படுத்த எளிதானது மற்றும் ஆற்றலுடையது. விரைவான வாடிக்கையாளர் சேவை.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனக்கு செயலி எப்படி உதவியாக இருக்கும்?

உங்கள் டிஷ்டிவி கணக்கிற்கு 24 x 7 அணுகலை வழங்குவதன் மூலம் My DishTV செயலி உதவுகிறது. அனைத்து கணக்கு தகவல்களும் ஒரு டேப்பிற்குள் அணுகலாம் மற்றும் அனைத்து மற்ற நடவடிக்கைகளிலும் 3 டேப்பிற்குள் அணுகும். உடனடி ரீசார்ஜ் போன்ற அம்சங்கள் உடன், கணக்கு மற்றும் பரிவர்த்தனை வரலாற்றை நிர்வகிக்கவும் பொது தகவல் மற்றும் பொதுவான சிக்கல்களுக்கு நீங்கள் வாடிக்கையாளர் மையத்தை அழைக்க தேவையில்லை.

செயலியில் பல்வேறு அம்சங்கள்/பிரிவுகள் என்ன இருக்கின்றன?

செயலியின் பல்வேறு பிரிவுகள்/அம்சங்கள் பின்வருமாறு:

  • உடனடி ரீசார்ஜ்: 3 டேப்களில் வெவ்வேறு பணம்செலுத்தல் வகைகள் யுபிஐ மற்றும் வாலெட்களை பயன்படுத்தி 3 டேப்களில் ரீசார்ஜ் செய்யலாம்.
  • ADI சாட்போட்: ரீசார்ஜுக்கு பிறகு டிவி பார்க்க முடியவில்லை, சப்ஸ்கிரைப் செய்த சேனலை பார்க்க முடியவில்லை போன்ற பொதுவான மற்றம் பிர பிரச்சனைகளை ADI சாட்போட் உடன் பிழைதிருத்தம் செய்யலாம். ADI-யிடம் உங்கள் டிஷ்டிவி தொடர்பான பிரச்சனைகளை கூறி விரைவான தீர்வைப் பெறுங்கள்.
  • இன்ஃப்ராரெட் ரிமோட்: இப்போது உங்கள் டிஷ் டிவி செட்-டாப்-பாக்சை உங்களது My DishTv ஆப்-இல் ஒரு இன்ஃப்ராரெட் ரிமோட் மூலம் பயன்படுத்தலாம். ஐஆர் ரிமோட் ஆனது இன்ஃப்ராரெட் டிரான்ஸ்மிட்டர்/பிளாஸ்டர் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களில் மட்டும்தான் வரும்.
  • உங்கள் பேக்கை மாற்றியமைக்கலாம்:இருப்பு, சப்ஸ்கிரைப் செய்த சேனல் மற்றும் ஸ்விட்ச்-ஆஃப்-தேதி போன்ற கணக்கு தகவல்களை விரிவாக காணலாம். உங்கள் பேக்கை அப்கிரேடு செய்யலாம், அதிக சேனல்கள் அல்லது ஆக்டிவ் சர்வீஸ்களை ஒருசில டேப்களில் சேர்க்கலாம். உங்களுக்கான பேக் தேர்ந்தெடுத்தல்/மாற்றியமைத்தல் செயல்முறைகளை எளிதாக்குவதற்காகவே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • சேனல் எண்ணை கண்டுபிடிக்கலாம்: சேனல் பெயரைக் கொண்டு சேனல் எண்ணை தேடலாம்.
  • சேனல் கையேடு: டிஷ்டிவி தளத்தில் உள்ள அனைத்து சேனல்கள் மற்றும் நிகழ்ச்சிகளின் விரிவான அட்டவணை. நிகழ்ச்சிகளின் அட்டவணைகளை பார்க்கலாம், நிகழ்ச்சிகளை விருப்பமுள்ளதாக குறித்து வைக்கலாம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு நினைவூட்டல்களை அமைக்கலாம். மேலும் நிகழ்ச்சி தகவலை உங்கள் நண்பர்களிடம் பகிரலாம்.
  • நிகழ்ச்சி பரிந்துரைகள்: இப்போது My DishTv உங்கள் டிவியில் அதிக பிரபலமான நிகழ்ச்சிகளை பரிந்துரைக்கும். தற்போது நடக்கும் சிறந்த டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளின் தகவல்களை முகப்பு திரையில் வைத்திருக்கும்.

டிஷ்டிவி செயலியை யார் பயன்படுத்தலாம்?

டிஷ்டிவி மற்றும் ஜிங் டிஜிட்டல் சந்தாதாரர்களுக்கு மட்டும் செயலி கிடைக்கும்.

செயலி மீது நான் எப்படி பதிவு செய்வது?

செயலியில் பதிவு செய்வதற்கு உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணை (ஆர்எம்என்) நீங்கள் பயன்படுத்தலாம். உள்நுழைவு பக்கத்தில் “பதிவுசெய்க” என்பதை தேர்ந்தெடுக்கவும் மற்றும் அடுத்த திரையில் உங்கள் ஆர்எம்என் உள்ளிடவும். உங்கள் ஆர்எம்என்-ஐ சரிபார்க்க நீங்கள் ஒரு ஓடிபி-ஐ பெறுவீர்கள். உள்நுழைவதற்கு ஓடிபி-ஐ உள்ளிடவும் மற்றும் உங்கள் கடவுச்சொல்லை தேர்வுசெய்யவும்.

நான் எப்படி உள்நுழைவது?

நீங்கள் செயலியில் மூன்று வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி உள்நுழையலாம்:

  • ஆப் தகவல்களை பயன்படுத்தி: நீங்கள் ஆப்-ஐ பதிவுசெய்த நேரத்தில் தேர்ந்தெடுத்த உங்கள் ஆர்எம்என்/விசி எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தலாம். மேலும் உங்கள் கணக்கிற்காக ஆப்-இல் உள்நுழைவதற்கு உங்கள் விவரங்களை www.dishtv.in இதில் பயன்படுத்தலாம்.
  • ஓடிபி பயன்படுத்தி (ஒரு-முறை-கடவுச்சொல்): உள்நுழைதல் பக்கத்தில் “ஓடிபி-ஐ கோரவும்” என்பதை தேர்ந்தெடுக்கவும், உங்கள் ஆர்எம்என்-ஐ அந்த பக்கத்தில் உள்ளிடுங்கள் மற்றும் நீங்கள் உங்கள் ஆர்எம்என்-இல் ஓடிபி-ஐ பெறுவீர்கள். ஆப் தானாகவே ஓடிபி-ஐ படித்துவிடும், சம்ர்ப்பி-ஐ மட்டும் டேப் செய்து உள்நுழையவும்.
  • உங்கள் சமூக வலைதள கணக்கை பயன்படுத்தி: நீங்கள் உங்கள் சமூக வலைதள கணக்கு (இமெயில் மற்றும் ஃபேஸ்புக்)-ஐ பயன்படுத்தி ஒரு டேப் செய்து உள்நுழையலாம். நீங்கள் இந்த வழிமுறையை முதல் முறை பயன்படுத்தும் போது மட்டும் உங்கள் சமூக வலைதள கணக்கு விவரங்களை வழங்க வேண்டும். நீங்கள் அடுத்த முறை உள்நுழையும்போது நாங்கள் உங்கள் சமூக வலைதள கணக்கை இணைத்துவிடுவேம். நீங்கள் உங்களுக்கு விருப்பமான சமூக வலைதள விருப்பத்தை தேர்ந்தெடுத்து உள்நுழையலாம்.

கடவுச்சொல்லை மறந்துவிட்டால் நான் என்ன வேண்டும்?

உள்நுழைவு பக்கத்தில், “கடவுச்சொல் மறந்துவிட்டது” என்பதன் மீது தட்டவும்-> உங்கள் ஆர்எம்என்-ஐ உள்ளிடவும் மற்றும் உங்கள் ஆர்எம்என் எண்ணில் புதிய கடவுச்சொல்லுடன் கூடிய ஒரு எஸ்எம்எஸ் ஐ நீங்கள் பெறுவீர்கள் அதோடு நீங்கள் பதிவுசெய்த இமெயில் ஐடியிலும் பெறுவீர்கள்.

மாற்றாக, மேலே விவரிக்கப்பட்டபடி உள்நுழைய ஓடிபி முறையை நீங்கள் பயன்படுத்தலாம்.

அதே உள்நுழைவை கொண்டு எனது அனைத்து கணக்குகளையும் நிர்வகிக்க முடியுமா?

ஆம், உள்நுழைவதற்கு நீங்கள் ஆர்எம்என்-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்றால், உள்நுழைகையில் விசி எண்ணை தேர்வு செய்யுமாறு உங்களிடம் கேட்கப்படும். அந்த அறிவுறுத்தலின்வாறு நீங்கள் விரும்பிய கணக்கிற்கான விசி எண்ணைத் தேர்வுசெய்யவும்.
உங்கள் கணக்கின் மற்ற விசி எண்(அதே மொபைல் எண்ணின்கீழ் பதிவுசெய்யப்பட்டது ) பற்றிய தகவலைக் காண வேண்டும் என்றால், முகப்பு திரையில் உங்கள் விசி எண்ணின் பட்டியலில் இருந்து விசி எண்ணை தேர்ந்தெடுத்து அவற்றின் தகவலைக் காணலாம்.

வேறு எந்த வகையான கட்டணம் செலுத்தும் முறைகள் மூலம் நான் ரீசார்ஜ் செய்ய முடியும்?

பின்வரும் பணம்செலுத்தல் முறைகள் மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம்:

  1. டெபிட் கார்டு
  2. கிரெடிட் கார்டு
  3. நெட்பேங்கிங்
  4. யுபிஐ
  5. வாலெட்கள்
    • பேடிஎம்
    • மொபிக்விக்
    நாங்கள் மேலும் பல வாலெட் விருப்பங்களை சேர்ப்பதில் இருக்கிறோம்.

சேனல் கையேடு வழங்கும் தகவல் என்ன?

அடுத்த 7 நாட்களுக்கு டிஷ்டிவி தளத்தில் கிடைக்கும் அனைத்து சேனல்களுக்கான புரோகிராம் அட்டவணை பற்றிய தகவலை சேனல் வழிகாட்டி வழங்குகிறது. தனிப்பட்ட புரோகிராம்களைப் பற்றிய விரிவான தகவல்களை இது வழங்குகிறது.
இது தவிர, நீங்கள் சேனல்களை பிடித்தவைகளாகவும், உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளுக்கு நினைவூட்டல்களை அமைக்கவும், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.

ஒரு புரோகிராமிற்கான ஒரு நினைவூட்டலை நான் எவ்வாறு அமைக்க வேண்டும்?

சேனல் கையேடிற்கு செல்லவும் -> நீங்கள் தேடும் புரோகிராமை கண்டுபிடிக்க செல்லவும் (நீங்களே புரோகிராம்களை தேடலாம்) -> விருப்பப்பட்ட புரோகிராம் மீது தட்டவும் அது புரோகிராம் தகவலை பாப்அப் செய்யும். பாப்அப் கீழே ஒரு நினைவூட்டல் ஐகான் உள்ளது. புரோகிராம் நினைவூட்டலை உங்கள் காலண்டரில் சேர்க்க அதைத் தட்டவும்.

நான் எப்படி சேனல்களை விருப்பமானதாக குறிப்பது மற்றும் விருப்பமுள்ள சேனல்களின் பட்டியலை எப்படி பெறுவது?

சேனல் கைடில் சேனலை விருப்பமுள்ளதாக மார்க்/அன்மார்க் செய்ய சேனல் ஐகான்மீது டேப் செய்யுங்கள். நீங்கள் விருப்பமுள்ளதாக மார்க் செய்த சேனல்களின் பட்டியலைப் பெற, ஃபில்டர்களுக்கு சென்று விருப்பமுள்ளவைகளை தேர்வு செய்யுங்கள் (ஃபில்டர் பட்டியலில் உள்ள முதல் தேர்வு) -> அப்ளை செய்யுங்கள்.

இந்த ஆப் எந்த ஆபரேட்டிங் சிஸ்டத்திற்கு கிடைக்கும்?

ஆண்ட்ராய்டு ஓஎஸ் பதிப்பு 4.0 மற்றும் அதற்கு மேல் செயலி கிடைக்கும்.

செயலில் டிவி நிகழ்ச்சிகளை நான் காண முடியுமா?

இப்போதைக்கு, My DishTv ஆப்-யில் ஸ்ட்ரீமிங் அம்ச வசதி இல்லை. எனினும் டிஷ்டிவி ஆப் தற்போது நடக்கும் மற்றும் வரப்போகும் டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளை முகப்பு திரையில் பரிந்துரை செய்யும்.

ADI சாட்போட்டை ஆப்-இல் எப்படி பயன்படுத்துவது?

இப்போது ADI சாட்போட் டிஷ்டிவி தொடர்பான பிரச்சனைகளுக்கு மற்றும் உங்கள் கேள்விகளுக்கு விரைவான தீர்வை அளிக்கிறது. முகப்பு திரையின் வலதுபக்கத்தின் கீழுள்ள ADI ஐகானை டேப் செய்து உங்கள் பிரச்சனைகளை எளிதாக சாட் செய்யலாம். மேலும் ADI வழங்கும் அறிவுறைகளையும் நீங்கள் பின்பற்றலாம்.

இன்ஃப்ராரெட் ரிமோட்டை எப்படி பயன்படுத்துவது?

இன்ஃப்ராரெட் ரிமோட் ஆனது இன்ஃப்ராரெட் பிளாஸ்டர்/டிரான்ஸ்மிட்டர் உள்ள சாதனங்களில் மட்டும் தான் வரும். அத்தகைய சாதனங்களின் உதாரணங்கள் ரெட்மி 4/5 மற்றும் ரெட்மி நோட் 4/5 உங்களிடம் அத்தகைய சாதனம் இருந்தால், ஐஆர் ரிமோட் ஐகானை முகப்பு திரையின் நடுவில் உள்ள நேவிகேஷனின்கீழ் தெரியும்.
ரிமோட்டை அணுக ஐஆர் ரிமோட் ஐகானை டேப் செய்யுங்கள். அதன் இன்டர்ஃபேஸ் ஆனது எளிதாக மற்றும் டிஷ்டிவி ரிமோட்டை போலவே இருக்கும்.
மேலே செல்ல ஸ்குரோல் செய்யவும்